Tamil Poetry for Our Planet
பெண்ணினமே……..
வலிகள் தாங்கி உயிர்கள் சுமக்கும் சக்தி கொண்டவள் – நீ !
உன் வேதனையின்போது உடன் நிற்க யார் இருந்தார்கள்?
சுமை என்று கூறா விடாமுயற்சி கொண்ட-வீரபெண்மணியே!
எங்கள் வாழ்க்கையில் ஒளியாய் திகழும் தாயெனும் பெண்ணினமே!
தீண்டா பொருள் என தனித்திருக்கும் நேரங்களிலும்
உன் கடமைகளை அறம்போல் கருதி, செய்து பிறந்தவள்- நீ !
உன் உடம்பை காக்க முயற்சி செய்து அருள் புரிவாய் நீயே
பிறருக்கு கரம் கொடுத்து வழி காட்டிடு -கண்மணியே!
Meaning of the poem
Despite your pain and struggles you stand up high to do your duties. You never fail nor falter. When in pain, you are left in solitude but you don’t complain. Your strength encourages many others to hold on and carry forward, but do take care of yourself and be an inspiration to others.
Reflection
Inspiring moms who never call in sick even when they are sick, kindles a thought on how strong women are. But do they always have to put up a show? Should they also spend a little time caring for themselves at least during those days when they too need to get some rest?

மாதரின் மகிமை
அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது.
அதனினும் அரிது மங்கையராய்
பிறப்பது பெரிது….
என்ற கூற்றுக்கேற்ப
என்றும் மங்காத
மனவலிமை உடையவள்
மங்கையவள் மட்டுமே…..
நிலமகளோ வெடிக்க மறந்தாலும்
அவள் தசைகளோ
பிளக்க மறப்பதில்லை
அதற்கு நாம் வைக்கும் பெயர்களோ….
அந்த மூன்று நாள்,
தீட்டு நாள், ஒதுக்கு நாள்
இன்னும் பல பெயர்களும் உண்டு.
மாதம் ஒருமுறை மறுபிறவி எடுக்கிறாள்.
மரணத்தின் வலியை மாதமாதம் சுமக்கிறாள்
“தெய்வத்திற்கேது தீட்டு?
பெண்ணும் தெய்வம் தானே”!
அதற்குள் அந்நாளில்
அவள் படும்
வேதனையோ ஏராளம்……
அவள் சிந்தும்
உதிரத்தைத் தீட்டு என்று
உதாசீனப்படுத்தாதே……
நீ உயிர் ஜனித்த
ரணத்தின் வலியும்- அதே !
உதிரமென்று யோசிக்க மறவாதே!…..
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து,
தவழ்வது,நடப்பது, பேசுவது
என்பது எப்படி இயல்பான நிகழ்வோ.
அதைப்போல் மாதவிடாயும்
இயல்பான ஒன்றே!
வருடம் முழுவதும்
தித்திக்கும் உணவளித்தவள்
அந்நாளில் தீண்டா பொருளாய்,
இனி ஒரு போதும்
அவளை அகதியாய் ஆக்காதே…..
உயிருள்ள பிணமாய்
உருகுலைந்து கிடப்பவளை
‘மூடநம்பிக்கை’ என்ற போலிப் பூச்சுகளால்
பூசி ஒடுக்குவது முறையா?
இது இயற்கை
இது இயல்பு நிலை
இது சாதாரணம்
இது அறிவியல்
என்று உணருங்கள்.
“மாதம் மாதம் விடாமல் துரத்தும் மாதவிடாயின்
இவ்வரிகள் எம் மாதர்களுக்கு சமர்ப்பணம் “……
திருமதி.அம்பிகா.K.V
Glorious women
A poem glorifying women. A biological happening that has been shrouded in tradition, mis-beliefs culture, religion and chauvinism. This poem has portrayed the pain of child birth and shuns the system of untouchable practices on these days. The poet has dedicated this poetry to all the women who have undergone or undergoing this biological happening.
Mrs.Ambika.K.V [Tamil Staff]
English Translation
PRIDE OF WOMEN
RARE, IT IS RARE
TO BE BORN AS A HUMAN.
IT IS EVEN MORE EXCEPTIONAL, TO BE BORN AS A
WOMAN
IN ACCORDANCE TO THE ABOVE VERSE
A BURGEONING STRENGTH -IS WHAT
CONSTITUTES A WOMEN
EVEN IF MOTHER EARTH FORGETS HER DUTY,
HER UTERUS LINING BURSTS OUT——
WITHOUT FORGETTING – WE NAME IT —
“THE THREE DAYS “
DAYS OF UNTOUCHABILITY
EVEN MORE NAMES TO IT
SHE UNDERGOES A NEW LIFE EVERY MONTH
IT IS SOMETIME —A PAIN OF DEATH
IS ALMIGHTY BLEMISHED?
THEN WOMAN AT PAR WITH ALMIGHTY
WHY SHOULD SHE BE BLEMISHED?
MEANWHILE-THOSE DAYS
ARE — STRUGGLES,
THE BLOOD SHE SHEDS IS NOT DIRTY,
DO NOT IGNORE IT……..
YOU CAME TO LIFE ,
THROUGH THIS PAIN AND BLOOD,
THIS BLOOD IS THE SAME,
DO NOT FORGET.
A CHILD –FROM BIRTH STARTS TO CRAWL, WALK,TALK
ALL THESE ARE NATURAL,
THE SAME IS WITH MENSTRUATION ………..
ALL YEAR SHE PREPARES AND FEEDS YOU,
BUT THESE 3 DAYS SHE IS KEPT AWAY IN ISOLATION
NEVER EVER SHOULD YOU TREAT HER AS A
REFUGEE.